முகப்பு
இந்தியா

அமித் ஷா, ஜெ.பி. நட்டாவுடன் அமரீந்தர் சிங் சந்திப்பு!

பாஜகவில் இணைந்த அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரைச் சந்தித்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:22 AM
பகிர்:

பாஜகவில் இணைந்த அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரைச் சந்தித்தார். 

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் பாஜகவில் இன்று இணைந்தார். 

50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வந்த அமரீந்தர் சிங், கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து வெளியேறி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கி, அண்மையில் நடந்த பஞ்சாப் பேரவைத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். 

ஆனால், தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது. பஞ்சாப் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில்  இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாபில் மத்திய பாஜக அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜுஜு, பாஜக தலைவர் சுனில் ஜாஹர், பஞ்சாப் பாஜக தலைவர் அஷ்வினி ஷர்மா ஆகியோர் முன்னிலையில் அமரீந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்தார். மேலும் தனது  பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைத்தார். 

பாஜகவில் இணைந்த பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார். 

முன்னதாக அமரீந்தர் சிங், இன்று காலையிலும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →