விபத்தா? தற்கொலையா? 9வது மாடியிலிருந்து விழுந்த ஐடி ஊழியர்
9வது மாடியிலிருந்து விழுந்து பலியான 42 வயது தகவல்தொழில்நுட்ப நிறுவன ஊழியரின் மரணம் விபத்தா அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், தான் வசித்து வந்த குடியிருப்பின் 9வது மாடியிலிருந்து விழுந்து பலியான 42 வயது தகவல்தொழில்நுட்ப நிறுவன ஊழியரின் மரணம் விபத்தா அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூருவிலிருந்து அண்மையில்தான் அவர் நொய்டாவுக்கு குடிபெயர்ந்திருந்தார். மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில், இவர் தனியாக வசித்துவந்த நிலையில், வியாழக்கிழமை, தனது வீட்டில் பால்கனியிலிருந்து கீழே விழுந்து பலியானார்.
இது குறித்து அவரது நண்பரிடம் விசாரித்ததில், செப்டம்பர் 6ஆம் தேதிதான், இவர் நொய்டாவில் உள்ள இந்த குடியிருப்புக்கு குடியேறினார் என்றும், கடந்த சில நாள்களாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததகாவும் கூறியுள்ளார்.
அவர் உயிரிழந்த அன்று, நொய்டா முழுக்க கனமழை பெய்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
உடனடியாக இந்த வழக்கில் எந்தமுடிவுக்கும் வரமுடியவில்லை என்றும், உடல் கூறாய்வு முடிவுகள் வெளியான பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது விபத்தா என்பது தெரிய வரும் என்கிறார்கள் காவல்துறையினர். இது குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.