முகப்பு
இந்தியா

கேரளம்: புதிதாக 29,491 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 29,491 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 8 பிப்ரவரி, 2022 at 7:25 PM
பகிர்:


கேரளத்தில் புதிதாக 29,491 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,491 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் 46,393  பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 28 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை  59,939 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இன்றைய நிலவரப்படி 2,83,676 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.