முகப்பு
இந்தியா

அதிகரிக்கும் கரோனா: இந்தியாவில் 33 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 33,750 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:00 AM
பகிர்:

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 33,750 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 33,750 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,45,582 ஆக உள்ளது. 
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 123 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,81,893 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 10,846 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,42,95,407 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

நாட்டில் இதுவரை 145 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 23,30,706 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 8,78,990 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 
இதுவரை மொத்தம் 68.09 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →