முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 1,94,720 பேருக்கு கரோனா; 442 பேர் பலி

நாட்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு  2 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

Updated On : 12 ஜனவரி, 2022 at 9:32 AM
பகிர்:

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் 1,94,720 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 442 பேர் உயிரிழந்தனர்.

நேற்று 1.68 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 15.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Advertisement

கரோனா தொற்றிலிருந்து 60,405 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு  9,55,319 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
தொற்று பாதிக்கப்படும் விகிதம் 11.05 சதவிகிதமாக உள்ளது.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,868-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரமும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானும் ஒமைக்ரானால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.