முகப்பு
இந்தியா

இந்தியாவில் 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

 இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 4,417 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:15 AM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 4,417 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,417 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,44,66,862 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 52,336  ஆக உள்ளது. 

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும்  23 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,28,030 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 6,032 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை4,38,86,496 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கடந்த 24 மணிநேரத்தில் 19,93,670 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  நாட்டில் இதுவரை 213.72 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில்  3,67,490 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 88.77 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →