இந்தியா

நீண்ட நாள்களுக்குப் பிறகு சரியான இடத்தில் இருக்கிறீர்கள்: அஜித் பவார் குறித்து அமித் ஷா!

அஜித் பவார் நீண்ட நாள்களுக்குப் பிறகு சரியான இடத்துக்கு வந்திருப்பதாகவும், ஆனால் மிகவும் தாமதமாக வந்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

DIN

அஜித் பவார் நீண்ட நாள்களுக்குப் பிறகு சரியான இடத்துக்கு வந்திருப்பதாகவும், ஆனால் மிகவும் தாமதமாக வந்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாருடன் நிகழ்ச்சி ஒன்றில் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்ட அமித் ஷா இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: அஜித் பவாருடன் நான் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது. நீண்ட நாள்களுக்குப் பிறகு அவர் சரியான இடத்தில் அமர்ந்திக்கிறார் என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த இடம் எப்போதுமே உங்களுக்கு சரியான இடமாகவே இருந்தது. ஆனால், நீங்கள் இந்த இடத்தில் அமர்வதற்கு மிகவும் தாமதமாக வந்துள்ளீர்கள் என்றார்.

இந்த நிகழ்வில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்களில் ஒருவரான தேவேந்திர ஃபட்நவீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஜித் பவார் கடந்த ஜூலை 2  ஆம் தேதி தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியான சிவசேனை-பாஜக கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT