முகப்பு
இந்தியா

9 மாநில அரசுகளைக் கவிழ்த்ததுதான் பாஜக சாதனை!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:07 PM
பகிர்:


9 மாநில அரசுகளை கவிழ்த்து ஆட்சியை பிடித்ததே பாஜகவின் சாதனை என தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சூலே விமர்சித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டது. 

இதில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சூலே, 9 மாநில அரசுகளை கவிழ்த்து ஆட்சியை பிடித்ததே பாஜகவின் சாதனை. கர்நாடகம்,  மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், அருணாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, உத்தரகாண்ட், கோவா, புதுச்சேரி ஆகிய 9 மாநில அரசுகளைக் கவிழ்த்ததே மத்திய பாஜக அரசின் சாதனை என சுப்பிரியா சூலே விமர்சித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.