இந்தியா

ஹிமாசல் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் கட்டடங்கள்! விடியோ

ஹிமசால பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து விழுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

DIN

சிம்லா: ஹிமசால பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து விழுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சிம்லா, மண்டி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், சிம்லா, மண்டி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லும் காட்சி மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.

தேசிய பேரிடா் மீட்புப் படையினா் (என்டிஆா்எஃப்), மாநில பேரிடா் மீட்புப் படையினா் (எஸ்டிஆா்எஃப்), ராணுவ வீரா்கள் உள்ளிட்டோா் நிலச்சரிவினால் காணாமல் போனவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாநிலத்தில் பருவமழை தொடங்கிய கடந்த ஜூன் 24 முதல் ஆக.14 வரை மொத்தம் ரூ.7,171 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமாா் 9,600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT