முகப்பு
இந்தியா

பிகாரில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை!

பிகார் மாநிலத்தின் அராரியாவில் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

Updated On : 18 ஆகஸ்ட், 2023 at 3:32 PM
பகிர்:

பிகார் மாநிலத்தின் அராரியாவில் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பிகாரை சேர்ந்த பத்திரிகையாளர் விமல் குமார்(41). இவர் டைனிக் ஜாக்ரன் என்ற பத்திரிகையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பிரேம் நகரில் வசித்துவரும் இவருக்கு அதிகாலை 5 மணியளவில் வீட்டிற்கு வெளியே வரும்படி தொலைபேசி அழைப்பு வந்தது. 

இதையடுத்து, வெளியே வந்த விமல்குமாரை மர்ம நபர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரத்த வெள்ளத்திலிருந்த விமல்குமார் அக்கம்பக்கத்தினர், மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் விமல் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விமல்குமார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம நபர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 2019-ல் விமல் குமாரின் சகோதரர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சி விமல்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.