முகப்பு
இந்தியா

காங்கிரஸில் இணைந்த திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் இளைஞரணித் தலைவர்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இளைஞரணித் தலைவர் யாசர் ஹைதர் காங்கிரஸில் இன்று இணைந்தார்.  

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
பகிர்:

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இளைஞரணித் தலைவர் யாசர் ஹைதர் காங்கிரஸில் இன்று இணைந்தார். 
கொல்கத்தாவில் கட்சியின் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி முன்னிலையில் அவர் தன்னைக் காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்பு நான் திரிணமூல் காங்கிரஸில் இருந்தேன், தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளேன். திரிணமூல் காங்கிரஸில் பணியாற்ற எனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. 
மேலும் காங்கிரஸில் சேர வேண்டும் என்பது எனது கனவு. ஆதிர் இங்கே இருக்கிறார். சௌமென் பாலுடன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருக்கிறேன். நான் காங்கிரஸுக்கு வந்த ஒரே காரணம் கட்சி உறுப்பினராக பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான். 
திரிணமூலில் நான் அரசியல்வாதியாக அறியப்படவில்லை, ஆனால் சமூகவாதியாக அறியப்பட்டேன். இவ்வாறு அவர் கூறினார். யாசர் ஹைதர், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் கொல்கத்தா மேயருமான ஃபிர்ஹாத் ஹகீமின் மருமகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →