முகப்பு
இந்தியா

தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லி நிலோத்தி என்ற கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று(திங்கள்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:52 AM
பகிர்:

தில்லி நிலோத்தி என்ற கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று(திங்கள்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 10 தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் பொருட்சேதம் அதிகளவில் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தொழிற்சாலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்களில் தீ பற்றி எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 

கடந்த வியாழக்கிழமை தில்லியின் பவானா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயணைப்பு வீரர்கள் 6 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →