பணமோசடி விசாரணையில் பஞ்சாபில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பாரத் பூஷண் ஆஷுவின் 6 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
பஞ்சாப் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பாரத் பூஷன் ஆஷு மற்றும் சிலருக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கினை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் நேற்று முன்தினம்(ஆக. 24) பஞ்சாபில் பாரத் பூஷண் ஆஷுக்கு தொடர்புடைய 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதையும் படிக்க | எண்ம பணப்பரிவர்த்தனை: குரல் மூலமாக பணம் அனுப்பும் வசதி! விரைவில்...
இதையடுத்து ஆஷூவின் ரூ.6 கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
பாரத் பூஷண் ஆஷு 2021-22ல் பஞ்சாபில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார். தற்போது பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.