ஸ்ரீநகர் சென்றார் சோனியா காந்தி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனிப்பட்ட பயணமாக சனிக்கிழமை ஸ்ரீநகர் சென்றடைந்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனிப்பட்ட பயணமாக சனிக்கிழமை ஸ்ரீநகர் சென்றடைந்தார்.
சனிக்கிழமை மதியம் விமான நிலையம் வந்திறங்கிய அவரை, கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து நைஜீன் ஏரிக்கு சென்ற அவர் படகு சவாரி செய்து மகிழ்ந்தார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை சோனியா குடும்பத்தினர் குல்மார்க்கிற்கு செல்ல உள்ளனர்.
இது முற்றிலும் அவரிகளின் தனிப்பட்ட குடும்பப் பயணம் என்றும் அரசியல் ஈடுபாடுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், வெள்ளிக்கிழமை ஸ்ரீநகர் வந்தார்.
தற்போது அவர் நைஜீன் ஏரியில் உள்ள படகு இல்லத்தில் தங்கியுள்ளார். இதனிடையே ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் ஸ்ரீநகர் செல்லவுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.