இந்தியா

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி

DIN

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக் குறைவால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிக லேசான பக்கவாதம் போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 3.40 மணியளவில் குமாரசாமி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அப்போது அவர் மிகவும் பலவீனமாகவும், அசௌகரியத்துடன் இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூத்த மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் அவரது மருத்துவர் குழுவினர் குமாரசாமியின் உடல்நிலையைக் கவனித்து வருகிறார்கள். சிகிச்சைக்கு குமாரசாமி நன்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

63 வயதாகும் குமாரசாமிக்கு ஏற்கனவே இரண்டு முறை இதய அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு நீரிழிவு பாதிப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT