இந்தியா

வில்லன் கதாபாத்திரமா மோடி? - வைரலாகும் பாஜகவின் டெர்மினேட்டர்!

'பிரதமர் மோடி வில்லன் கதாபாத்திரமா?' என பாஜகவின் ஒரு ட்விட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

DIN

'பிரதமர் மோடி வில்லன் கதாபாத்திரமா?' என பாஜகவின் ஒரு ட்விட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று(புதன்கிழமை) ஒரு பதிவிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி 'டெர்மினேட்டர்' என்று கூறி  '2024ல் மீண்டும் வருவேன்' என்று டெர்மினேட்டர் படத்தின் ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு மோடியின் புகைப்படத்துடன் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. 

மேலும் அத்துடன் "பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியும் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. கனவு காணுங்கள்! டெர்மினேட்டர் எப்போதும் வெற்றி பெறும்" என்று ஒரு பதிவினை இட்டுள்ளது. அதாவது 2024 தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவார் எனக் குறிப்பிட்டுள்ளது. 

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள 'இந்தியா' கூட்டணியின் 3 ஆவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் பாஜக இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் பாஜகவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதுடன் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்தும் கிண்டல் செய்தும் வருகின்றனர். 

'பிரதமர் மோடி என்ன வில்லன் கதாபாத்திரமா? அந்த படத்தில் டெர்மினேட்டர் ஒரு வில்லன் பாத்திரம். பாஜகவும் பிரதமர் மோடியை அப்படித்தான் நினைக்கிறது' என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் தனது பதிவில், 'பிரதமர் மோடியை பாஜக 'டெர்மினேட்டர்'(அழிப்பவர்) என்று கூறுகிறது. 

அவர் அரசியலமைப்பை அழிப்பவரா?
நாடாளுமன்றத்தை அழிப்பவரா?
சிறுபான்மையினரை அழிப்பவரா?
ஒற்றுமையை அழிப்பவரா?
நாட்டின் சமூகத்தை அழிப்பவரா?

எதைச் சொல்கிறீர்கள் பாஜக? ' என்று பதிவிட்டுள்ளார். 

'2024 தேர்தலில் பிரதமர் மோடிதான் பதவியில் இருந்து நீக்கப்படுவார் (டெர்மினேட் செய்யப்படுவார்)' என்றும் 'ஒருவரைக் காப்பாற்ற உலகத்தையே அழிக்க அனுமதித்த உணர்ச்சியற்ற, கொல்லும் இயந்திரத்துடன் பிரதமரை ஒப்பிடுகிறீர்களா?' என்றும் பதிவுகள் வந்துள்ளன. 

ஆங்கிலத்தில் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் நடித்த டெர்மினேட்டர் திரைப்படம் முதலில் 1984ல் வெளியானது. அறிவியல் புனைகதையில் உருவான இப்படத்தின் அடுத்தடுத்த 6 தொடர்கள் இதுவரை வெளியாகியுள்ளன. 2019ல் இதன் ஆறாவது படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி பாலியல் வழக்குகள்: வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தவெக 2வது மாநில மாநாடு தொடங்கியது: இளைஞர்கள் கூட்டத்தால் திணறும் மதுரை!

பாரபத்தியில் தவெக மாநாடு! பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!!

தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அமைச்சர் Rajnath Singh சிங்குடன் விண்வெளி நாயகன் Subhanshu Shukla!

SCROLL FOR NEXT