இந்தியா கூட்டணி கூட்டம்: சோனியா, ராகுல் மும்பை வந்தனர்
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் மும்பை வந்தனர்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் மும்பை வந்தனர்.
மும்பை விமான நிலையத்தில் திரண்டிருந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், சோனியா மற்றும் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’யின் 2 நாள் ஆலோசனைக் கூட்டம், மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் இன்று தொடங்குகிறது.
இக்கூட்டத்தில் கூட்டு பிரசார வியூகத்தை வகுப்பதோடு, கூட்டணியின் இலச்சினை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை வலுவுடன் எதிா்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ (இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி) என்ற புதிய கூட்டணியை அமைத்துள்ளன.
இதையும் படிக்க.. விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்: அரசாணை வெளியீடு
இக்கூட்டணியின் 2 நாள் ஆலோசனைக் கூட்டம், மும்பையில் வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் நடைபெறுகிறது.
பாட்னா, பெங்களூரைத் தொடா்ந்து நடைபெறும் இந்த மூன்றாவது கூட்டத்துக்கான ஏற்பாடுகள், சிவசேனை (உத்தவ் பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலைவா்கள் வருகை
கூட்டத்தில் பங்கேற்க, கட்சிகளின் தலைவா்கள் மும்பைக்கு வரத் தொடங்கியுள்ளனா். இன்று பிற்பகலில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் மும்பை சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மும்பைக்கு புதன்கிழமை வந்தாா். முன்னதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் யாதவ், அவரது மகனும் பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை மாலையில் வந்தனா்.
பெங்களூரு கூட்டத்தில், எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டது. தற்போது மும்பை கூட்டத்தில் கூட்டணியின் இலச்சினை வெளியிடப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.