முகப்பு
இந்தியா

தாய், குழந்தை வெட்டிக் கொலை, மனநலம் பாதித்தவர் கைது!

பேரன் விடாமல் அழுததால் கோபத்தில் குழந்தையையும் தாயையும் வெட்டிக்கொலை செய்த மனநலம் பாதித்த தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 8 டிசம்பர், 2023 at 5:20 PM
கோப்புப்படம்.
பகிர்:

உத்திர பிரதேச மாநிலம் முடியக்கலன் கிராமத்தில் இரண்டு வயது பேரன் தொடர்ந்து அழுததால் கோபத்தில் குழந்தையும் மருமகளையும் கொன்ற தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 55 வயது நிரம்பிய கமல்காந்த் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் கண்காணிப்பாளர் சக்ரேஷ் மிஷ்ரா, ஆயுஷ் எனும் இரண்டு வயது பேரனையும், ஷிக்கா எனும் தாயையும் கமல்காந்த் அரிவாளால் தாக்கி கொடூரமாகக் கொன்றதாகத் தெரிவித்துள்ளார்.  

Advertisement

மேலும், குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், தாய் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நான்கு பேர் மட்டும் இந்த வீட்டில் வாழ்ந்துவந்த நிலையில் குழந்தையின் தந்தை பஞ்சாப்பில் வேலை செய்து வருவதாக குழந்தையின் பாட்டி தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.