இந்தியா

காங்கிரஸ் இருக்கும்போது எதற்கு மனி ஹெய்ஸ்ட்?: மோடி

காங்கிரஸ் எம்.பி. சாஹுவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து மோடி பதிவிட்டுள்ளார்.

DIN

ஒடிசாவில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ரூ.350 கோடி விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹுவுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் மதுபான ஆலையில் ரூ.351 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

இது குறித்த விடியோ ஒன்றை பாஜக, எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தைக் காட்டும் காட்சிகளும் காங்கிரஸ் தலைவர்கள் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த விடியோவைப் பகிர்ந்த நரேந்திர மோடி, “இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இருக்கும்போது மனி ஹெய்ஸ்ட் (இணைய தொடர்) போன்ற புனைவுகளுககு அவசியமில்லை, 70க்கும் மேலான ஆண்டுகளாக கொள்ளையர்களாகத் தொடர்ந்துவரும் முன்னோடிகள் இவர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஒடிசாவில் உள்ள பெளத் மதுபான ஆலையில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்கில் வராத ரூ.351 கோடி ரூபாயைக் கைப்பற்றியுள்ளனர். ஒரே சோதனையில் சிக்கிய அதிகபட்ச பணம் இதுதான் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை மிரட்டி வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை!

என்எல்சி நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணா்வு ஒப்பந்தம்

ரூ.6.74 லட்சம் பணம் மோசடி: இளைஞா் சிக்கினாா்

சிதம்பரத்தில் தேசிய நூலக வார விழா

நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் விளையாட்டு அறை திறப்பு

SCROLL FOR NEXT