புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பாதுகாப்பு மீறல்: சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக தில்லி காவல்துறை கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
புது தில்லி: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக தில்லி காவல்துறை கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பயங்கரவாதத் தாக்குதலின் 22 ஆண்டு நிறைவையொட்டி,புதன்கிழமை நடந்த ஒரு பெரிய பாதுகாப்பு மீறலில், லக்னௌவைச் சோ்ந்த சாகா் சா்மா மற்றும் கா்நாடகத்தின் மைசூரைச் சோ்ந்த டி.மனோரஞ்சன் ஆகிய இருவர், பூஜ்ஜிய நேரத்தில் பாா்வையாளா் மாடத்தில் இருந்து பிற்பகல் 1.12 மணியளவில் மக்களவை அறைக்குள் குதித்து,சர்வாதிகாரம் கூடாது என்று முழக்கமிட்டவாறே அவைத் தலைவர் இருக்கையை நோக்கி விரைந்தவர்கள், அவைக்குள் குதித்து வண்ணப்புகைக் குப்பிகளை வீசியுள்ளனர்.
இதையும் படிக்க | மக்களவையில் புகை: திட்டமிட்டு அரங்கேற்றிய 6 நண்பர்கள்
அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அமோல் ஷிண்டே மற்றும் ஹரியாணாவைச் சோ்ந்த நீலம் தேவி ஆகிய இருவர், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே "சர்வாதிகாரம் கூடாது" என்று முழக்கமிட்டவாறே இதேபோன்று வண்ணப்புகைக் புகைக் குப்பிகளை வீசி வீசியுள்ளனர்.
இந்த சம்பவத்தை திட்டமிட்ட 6 பேர் கொண்ட குழுவில் நால்வரும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தில்லி காவல்துறை கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகியவற்றின் தொடர்புடைய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணை காவல்துறை சிறப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைதான 5 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 5 பேரின் கல்வித் தகுதி பின்னமி, போராட்ட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவது குறித்து சிறப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களின் சமூக ஊடக நடவடிக்கைககள் மற்றும் கடந்த கால வரலாறு குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.