முகப்பு
இந்தியா

மனைவி குழந்தைகளை சுட்டுக்கொன்று காவலர் தற்கொலை! 

தெலுங்கானாவில் மனைவி குழந்தைகளை சுட்டுக்கொன்று காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 15 டிசம்பர், 2023 at 3:08 PM
கோப்புப்படம்.
பகிர்:

தெலுங்கானாவில் உள்ள சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட பாதுகாப்பு காவலர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காவலர் நரேஷ், மாவட்ட ஆட்சியர் ஊரில் இல்லாததால் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். காலை 11.30 மணியளவில் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என  சித்திபேட்டை காவல் ஆணையர் என். சுவேதா தெரிவித்துள்ளார்.  

கொலை மற்றும் தற்கொலைக்கான காரணங்களை காவல்துறையினர் விசாரித்துவரும் நிலையில் காவலர் நரேஷ் கடன் தொல்லைகளால் அவதிப்பட்டுவந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த முடிவுக்கு கடன்தொல்லை காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்,  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.