இந்தியா

ராஜஸ்தான் சிகாரில் பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் பலி, 3 பேர் காயம்

ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டம், ஸ்ரீமதோபூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.

DIN

சிகார் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டம், ஸ்ரீமதோபூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி கைலாஷ் சந்த் குர்ஜார் கூறுகையில், சிகார் மாவட்டம், ஸ்ரீமதோபூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த மூன்று பேரும் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழிவாங்குவது கீழ்மையான போக்கு! - மெட்ரோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT