முகப்பு
இந்தியா

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்தது: 8 பேர் காயம்

கேரளத்தின் குமுளி அருகே சபரிமலைக்குச் சென்ற வாகனம் கவிழ்ந்ததால், தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:29 PM
பகிர்:

கேரளத்தின் குமுளி அருகே சபரிமலைக்குச் சென்ற வாகனம் கவிழ்ந்ததால், தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர். 

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் வழிபாடு செய்யத் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது குமுளி அருகே சங்கரகிரியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வாகனம் வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது இந்த விபத்தின்போது 26 பக்தர்கள் வாகனத்தில் இருந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் கட்டப்பனாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →