இந்தியா

கார் நிறுவனத்தின் விளம்பர தூதராக.. பிரபல பாலிவுட் நடிகை!

DIN

ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுவனம், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனைத் தங்களின் விளம்பர தூதராக அறிவித்துள்ளது.

2024-ல் ஹூண்டாய் புதிய க்ரெட்டா மாடல் காரை ஜன.16 அன்று அறிமுகம் செய்யவுள்ளது. அதையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஷாருக் கான் ஏற்கெனவே இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக 20 ஆண்டுகளாக உள்ளார்.

ஹூண்டாய் க்ரெட்டா கார்

நடுத்தர எஸ்யூவி வகை கார்களில் க்ரெட்டா அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷாருக் கானின் ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் முதன்முறையாக அறிமுகமாகியவர் தீபிகா படுகோன். பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா மற்றும் ஷாருக்கின் ஜோடி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. 

திரைக்கு வெளியே கார் விளம்பரத்தில் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

இவர்களைத் தவிர கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்திக் பாண்டியாவும் இந்நிறுவனத்தில் விளம்பரத் தூதராக இணைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுமக்கள் நீா்நிலைகளுக்கு செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அரியலூா் ஆட்சியா் அறிவுரை

மண்வள அட்டையை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -அரியலூா் வேளாண் துறை

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பக்கிள் ஓடையில் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

பாலியல் புகாா்: தஞ்சை மருத்துவப் பேராசிரியா் நாகைக்கு இடமாற்றம்

SCROLL FOR NEXT