வயநாட்டில் பழங்குடியினர் வீட்டுக்குச் சென்றார் ராகுல்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இன்று தனது சொந்த தொகுதிக்குச் சென்றார். அண்மையில் மருத்துவக் கல்லூரிக்கு அருகே மரணமடைந்த பழங்குடியினரின் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்தார்.
வயநாடு: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இன்று தனது சொந்த தொகுதிக்குச் சென்று, அண்மையில் மருத்துவக் கல்லூரிக்கு அருகே மரணமடைந்த பழங்குடியினரின் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்தார்.
விஸ்வநாதன் (46), என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு அருகே பிப்ரவரி 11ஆம் தேதி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவியை பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அவர் மரணமடைந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தது.
இதையும் படிக்க.. நோய்க்கு மருந்தாக மாறிய பழைய சோறு.. ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்த தகவல்
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கோழிக்கோடு வந்த ராகுல் காந்தி, வயநாட்டில் உள்ள விஸ்வநாதன் வீட்டுக்கு, கட்சித் தலைவர்களுடன் சென்றார். அவர்களது குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கேட்டறிந்தார்.
முன்னதாக, பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்த நிலையில், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான், பிப்ரவரி 11ஆம் தேதி விஸ்வநாதன் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதையும் படிக்க.. பத்து வழிச் சாலையில் இந்தா ஆறு இங்க இருக்கு.. மிச்சம் நான்கு எங்கே?
ஒரு சில நாள்களுக்கு முன்பு, விஸ்வநாதனை சிலர் துன்புறுத்தியதாகவும், அதன்பிறகுதான் அவர் காணாமல் போனதாகவும் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.