இந்தியா

2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு சவாலானதாக அமையும்: சசி தரூர்

DIN

மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் பாஜகவுக்கு எதிரான பொதுவான ஒரு வேட்பாளரை எதிர்க்கட்சிகள் ஆதரித்தால் தேர்தலானது சவாலானதாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சிகள் ஒரு பொதுவான வேட்பாளரை ஆதரித்தால் ஆளும் பாஜகவுக்கு அது நெருக்கடியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார். பிடிஐ-ன் நேர்காணலில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நேர்காணலில் அவர் பேசியதாவது: பாஜகவுக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் எளிதானதாக இருக்காது. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல தற்போது வெற்றி பெற முடியாது. பாஜகவினைத் தவிர்த்து காங்கிரஸ் மிகப் பெரிய கட்சியாக உள்ளது. பாஜகவுக்கு  செல்வாக்கு இல்லாத மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு ஆதரவு இருக்கிறது. கேரளம் மற்றும் தழிழகத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு உள்ளது. கடந்த இரு மக்களவைத் தேர்தலிலும் பாஜக 31 சதவிகிதம் மற்றும் 37 சதவிகிதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் பிரிந்து தனித்தனியாக இருந்ததால் அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது மிகவும் முக்கியம். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் ஒன்றினைய வேண்டும். எதிர்க்கட்சிகளால் பொதுவாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அவர்களால் பாஜவின் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அதன் பின் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஆளும் பாஜவுக்கு மிகவும் சவாலனதாக இருக்கப் போகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி நாட்டில் காணப்படுகிறது. அதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவை இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் பிரதிபலிக்க முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமராவதி!

காத்திருக்கும் சுவாரஸ்யம்... சிஎஸ்கே, ஆர்சிபி ‘பிளே-ஆஃப்’ செல்வதற்கான வழி என்ன?

செங்கல்பட்டு சாலை விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

SCROLL FOR NEXT