முகப்பு
இந்தியா

தவறான விமான நிலையத்துக்கு வந்துவிட்டு, பிரதமர் மோடியை குற்றம் சொன்னது ஏன்?

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு தவறுதலாக வந்துவிட்ட பயணி ஒருவர், அதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜி-20 மாநாடு என பலவற்றையும் குற்றம்சாட்டி வெளியிட்ட விடியோ வைரலாகி வருகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
பகிர்:


மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு தவறுதலாக வந்துவிட்ட பயணி ஒருவர், அதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜி-20 மாநாடு என பலவற்றையும் குற்றம்சாட்டி வெளியிட்ட விடியோ வைரலாகி வருகிறது.

ஆகாசா ஏர் நிறுவனத்தின் விமானத்தில் மும்பையிலிருந்து பெங்களூரு செல்ல வேண்டிய உஜ்ஜவல் திரிவேதி என்பவர், உள்ளூர் விமான நிலையத்துக்குப் பதிலாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துவிடுகிறார்.

விமான நிலையத்துக்குள் நுழைந்த பிறகுதான், அவர் முன்பதிவு செய்த விமானம் உள்ளூர் விமான நிலையத்திலிருந்து புறப்படுவது அவருக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால், தான் முன்பதிவு செய்த விமான டிக்கெட்டில் சர்வதேச விமான நிலையம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் விடியோவில் காண்பித்து, விமான டிக்கெட்டில் சர்வதேச விமான நிலையம் என்று குறுப்பிட்டிருந்தால் தான் எவ்வாறு உள்ளூர் விமான நிலையத்துக்குச் செல்வேன் என்றும், நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார், ஜி-20 மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சாதாரண மனிதனுக்கு இத்தனை பிரச்னைகள் உள்ளன என்று விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

காலை நேரத்தில் விமானத்தைப் பிடிக்க ஒருவர் எப்படி வருவார் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் விமான நிலையத்துக்கு வந்ததம் அது தவறான விமான நிலையம் என்று தெரிந்தால் எப்படி இருக்கும். சரியான விமான நிலையத்தின் பெயரை குறிப்பிட்டிருக்கலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், சில செயலிகள் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இவ்வாறு தவறான விமான நிலையத்தின் பெயர்தான் பதிவு செய்யப்பட்டு வரும் என்றும் அவர் அந்த டிக்கெட் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதற்கு ஆகாசா ஏர் நிறுவனம் சார்பில் மன்னிப்புக் கோரியிருக்கிறது. இது குறித்து மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அவரது விடியோ பரவிய நேரத்துக்குள் பலரும், நீங்கள் தவறான விமான நிலையம் சென்றதற்காக பிரதமர் நரேந்திர மோடியை குற்றம்சாட்டுவது ஏன் என்று கருத்துகளை பதிவிட்டு வந்தனர். பிறகு மற்றொரு விடியோவையும் உஜ்ஜவால் வெளியிட்டிருந்தார். அதில், செயலி மற்றும் விமான நிறுவனம் இரண்டுமே தங்களது தவறை ஒப்புக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.

மேலும், ஏன் அந்த விடியோவில் பிரதமர் நரேந்திர மோடியையும் ஜி20 மாநாட்டையும் குற்றம்சாட்டினீர்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதாவது, ஒரு பிரச்னையை எப்படி எழுப்ப வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் நம் நாட்டைப் பற்றி ஒரு தகவலை எடுத்துச் சொல்ல விரும்பும்போது, இங்கே அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அதனை தெரியப்படுத்த வேண்டும். இது நமது கடமையும் கூட என்று விளக்கமும் அளித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →