இந்தியா

முன்னாள் கல்லூரி மாணவரால் தீவைக்கப்பட்ட தலைமை பேராசிரியர் மரணம்

DIN

முன்னாள் கல்லூரி மாணவரால் தீவைக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த கல்லூரிதலைமை பேராசிரியர் சனிக்கிழமை காலை மரணமடைந்தார்.

ஏற்கனவே, முன்னாள் மாணவர் கொலை மிரட்டல் விடுத்த போது காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் அதன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த சம்பவம் நடந்ததாகவும் உயிரிழந்த தலைமை பேராசிரியரின் மகள் குற்றம்சாட்டியுள்ளார்.

54 வயதான விமுக்தா ஷர்மா, இந்தூரில் இயங்கி வரும் பிஎம் கல்லூரியின் தலைமை பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மீது பிப்ரவரி 20ஆம் தேதி முன்னாள் மாணவர் தீ வைத்த நிலையில், உடலில் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கற்றவாளி அசுசோஷ் ஸ்ரீவத்சவா, பி.பார்ம் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் செய்யப்பட்டதால், விமுக்தா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியதில், அவருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டது.

இதையும் படிக்க.. குறைந்த கட்டணத்தில் புதுச்சேரிக்கு விமானத்தில் பறக்க தயாராகுங்கள்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை காலை அவர் மரணமடைந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT