கைப்பேசி திருடப்படுவதைத் தடுக்க மிகச் சிறந்த தொழில்நுட்பம் அறிமுகம் 
இந்தியா

கைப்பேசி திருடப்படுவதைத் தடுக்க மிகச் சிறந்த தொழில்நுட்பம் அறிமுகம்

கைப்பேசிகள் திருடப்படுவதையும் களவுபோனவை மற்றவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருவதையும் தடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை கர்நாடக காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

DIN

பெங்களூரு: செல்லிடப்பேசி எனப்படும் கைப்பேசிகள் திருடப்படுவதையும் களவுபோனவை மற்றவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருவதையும் தடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை கர்நாடக காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

செல்லிடப்பேசிகள் திருடப்படுவது நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அதனை முற்றிலும் தடுக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. தொலைத்தொடர்பு துறை சார்பில் மத்திய கைப்பேசி அடையாள பதிவு முறை  (சிஇஐஆர்) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கைப்பேசி திருடப்படுவது தடுக்கப்படும்.

அனைத்து செல்லிடப்பேசி ஆபரேட்டர்களின் பயன்பாட்டில் உள்ள செல்லிடப்பேசிகளின் சர்வதேச செல்லிடப்பேசி கருவி அடையாள எண் (ஐஎம்இஐ) இந்த மத்திய கைப்பேசி அடையாள பதிவு முறையில் இணைக்கப்படும்.

இது அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் மத்திய அமைப்பாக செயல்படும், அப்போது ஒரு செல்லிடப்பேசி திருடப்பட்டுவிட்டால், அந்த செல்லிடப்பேசி ஒரு தொலைத்தொடர்பு சேவையால் தடை செய்யப்பட்டுவிட்டால் அதனை வேறு தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தாலும் இயக்க முடியாது. இதன் மூலம் வேறு சிம் கார்டு மாற்றினாலும் அந்த செல்லிடப்பேசி இயங்காது.

சிஇஐஆர் திட்டம் மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து அலகுகளுக்கும் தனித்தனி லாகின் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் காவல்துறை டிஜி-ஐஜிபி பிரவீன் சூட். ஏற்கனவே தில்லி மற்றும் மகாராஷ்டிரத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மூன்றாவது மாநிலமாக கர்நாடகம் மாறியிருக்கிறது.

சிஇஐஆர், மிகச் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால், திருட்டுப்போகும் செல்லிடப்பேசிகளை யாரும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி, செல்லிடப்பேசி திருட்டுகள் குறையும் என்றும் சூட்தெரிவித்துள்ளார்.

திருட்டுப்போன செல்லிடப்பேசிகளை சிஇஐஆர் மூலம் மற்றவர் பயன்படுத்தாமல் தடை செய்ய, உரிமையாளர் அல்லது புகார் கொடுத்தவர் www.ceir.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். ஒரு வேளை புகார்தாரரால் அதனை தடை செய்ய முடியாவிட்டால், காவல்துறையினர் இ-லாஸ்ட்  உள்ளிட்டவற்றின் மூலம் தடை செய்து கொள்ளலாம்.

பிறகு, சிஇஐஆர் மூலம், செல்லிடப்பேசி எங்கே இருக்கிறது என்றும் தகவல் திரட்டும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனிதநேயம், நீதி படுகொலை: தலித் இளைஞர் கொலைக்கு ராகுல் கண்டனம்!

உடல் பருமன் இருந்தால் மறதி ஏற்படுமா? - ஆய்வில் முக்கிய தகவல்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு! பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

முதல்வர் ஸ்டாலின் வருகை! கோவையில் போக்குவரத்து மாற்றம்!!

கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT