தில்லியில் கடும் பனிமூட்டம்: ரயில்கள் தாமதம்
தில்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, ரயில்கள் தாமதம் இயக்கப்படுகின்றன என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தில்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, ரயில்கள் தாமதம் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பனிமூட்டம் காரணமாக தில்லிக்கு செல்லும் 21 ரயில்கள் சில மணி நேரம் தாமதமாக வந்ததாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தில்லியில் நிலவும் கடும் பனி மற்றும் மோசமான வானிலை காரணமாக திங்கள்கிழமை இரவு 5 விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டதாக சர்வதேச விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.
அதிவிரைவு ரயில், பிரிமியம் ரயில்களும் தாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இன்று அதிகாலை நகரின் சில பகுதிகளில் ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கடும் பனிமூட்டத்தால், ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜன.11-ல் துணிவு?
அடுத்த 2 நாள்களுக்கு தில்லியில் மிதமான முதல் கடுமையான பனி நிலவும் என்றும், இந்த வார இறுதியில் பனியின் பாதிப்பு குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.