கோப்புப்படம் 
இந்தியா

டீசல் மீதான வாட் வரியை திடீரென உயர்த்திய ஹிமாசல் அரசு 

ஹிமாசல் அரசு டீசல் மீதான வாட் வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளது. 

DIN

ஹிமாசல் அரசு டீசல் மீதான வாட் வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளது. 

இதுகுறித்து மாநில வரிகள் மற்றும் கலால் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், டீசல் மீதான வாட் வரி(மதிப்பு கூட்டு வரி) ரூ.3.01லிருந்து, ரூ.7.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வுக்குப் பிறகு, மாநிலத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.86 ஆக இருக்கும். இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த விலை உயர்வுக்கு அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டீசல் விலை உயர்வால், சரக்குக் கட்டணம் அதிகரித்து, விவசாயிகளுக்கு சுமை அதிகரிக்கும் என்று பாஜக தெரிவித்துள்ளது. முன்னதாக ஹிமாசல் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த மாநிலத்தின் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

ஹிமாசலில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. இதையடுத்து மாநிலத்தின் 15-ஆவது முதல்வராக சுக்விந்தா் சிங் சுக்கு (58) பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தைவிட்டு வெளியேறும் சர்மா ஓலி! ராணுவ ஆட்சி?

தில்லியில் அமித் ஷாவைச் சந்தித்தேன்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

26 ஆண்டுகளுக்குப் பின் வைரல்! யார் இந்த பாடகர் சத்யன்?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 24 மாவட்டங்களில் மழை!

போலி தத்தெடுப்பு ஆவணங்களைப் பயன்படுத்தி குழந்தைகள் விற்பனை மருத்துவா் உள்பட 10 போ் கைது

SCROLL FOR NEXT