ராஜஸ்தானில் பதிவான 41 பாலியல் பலாத்கார வழக்குகள் பொய்யானவை 
இந்தியா

ராஜஸ்தானில் பதிவான 41 பாலியல் பலாத்கார வழக்குகள் பொய்யானவை

ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவான ஒட்டுமொத்த பாலியல் பலாத்கார வழக்குகளில் 41 சதவீதம் பொய்யானவை என்ற அதிர்ச்சித் தகவலை காவல்துறை டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

PTI

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவான ஒட்டுமொத்த பாலியல் பலாத்கார வழக்குகளில் 41 சதவீதம் பொய்யானவை என்ற அதிர்ச்சித் தகவலை காவல்துறை டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி உமேஷ் மிஷ்ரா பேசுகையில், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், மாநிலத்தில் பதிவான ஒட்டுமொத்த பாலியல் பலாத்கார வழக்கில் 41 சதவீத வழக்குகள் பொய்யானவை என்று தெரிய வந்துள்ளது. நாட்டிலே இதுபோன்ற பொய்யான வழக்குகளின் விகிதம் 8 சதவீதம்தான் என்று கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், நாட்டிலேயே பாலியல் பலாத்கார வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. மத்தியப் பிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில்தான் ராஜஸ்தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர், மக்கள் கொடுக்கும் அனைத்துப் புகார்களையும் பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் அவ்வாறு அனைத்து வழக்குகளும் பதிவு செய்யப்படுவதில்லை. அதனால்தான் அங்கு குற்றம் குறைவாக இருப்பது போல காணப்படுகிறது என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்! கரூரில் 8.45 லட்சம் பேர்!

மணிரத்னம் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி கூட்டணியில் புதிய படம்?

SCROLL FOR NEXT