இந்தியா

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்!

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

DIN

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதியும் நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27-ஆம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திரிபுரா தேர்தல் ஆணையர் கூறியதாவது:

சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான துணை ராணுவ வீரர்கள் திரிபுரா வந்தடைந்துள்ளனர். இன்றுமுதல் இரவு ரோந்துப் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபடவுள்ளனர்.

சட்டவிரோத பணப்புழக்கம், போதைப் பொருள் உள்ளிட்டவையை தடுக்க 14 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திரிபுரா தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தி தரப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT