இந்தியா

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிதாக 140 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்றபட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,960 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக உள்ளது. இறப்பு எண்ணிக்கை 5,30,733 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேகலாயாவில் ஒருவரும், குஜராத்தில் இருவரும் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

கரோனா தினசரி பாதிப்பு விகிதம் 0.10 சதவிகிதமாக உள்ளது. கரோனா ஒரு வாரத்துக்கான பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 0.01 சதவிகிதமாக இருக்கிறது. இந்திய அளவில் கரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 98.81 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் நாட்டில் இதுவரை 220.28 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT