முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்! 

இன்று உத்தரகண்டின் பித்தோராகர் நகரில் 3.8 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:46 PM
கோப்புப்படம்
பகிர்:

இன்று உத்தரகண்டின் பித்தோராகர் நகரில் 3.8 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

தேசிய நில அதிர்வு மையத்தின் தரவுகளின்படி, இன்று காலை 8:58 மணியளவில் பித்தோராகர் நகருக்கு 23 கிமீ தொலைவிலும், நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ., எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை

உத்தரகண்டின் ஜோஷிமட் நகரத்தின் நிலப்பகுதி அண்மைக் காலமாக தாழ்ந்து வருகிறது. வீடுகள், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் பெரிய அளவிலான விரிசல்கள் விழுந்து, மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் உத்தரகண்ட் மக்களை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →