இந்தியா

தேசத்தை ஒன்றிணைக்கவே ராகுல் காந்தி நடைப்பயணம்: ஹிமாசல் முதல்வர்

தேசத்தை ஒன்றிணைக்கவே ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளதாக என்று ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்துள்ளளார்.

DIN

தேசத்தை ஒன்றிணைக்கவே ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளதாக என்று ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்துள்ளளார்.

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்ராவுக்கு எதிரான மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு பதிலளித்த ஹிமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, "பாரத் ஜோடோ யாத்திரையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, ஆனால் ராகுல் காந்தி தேசத்தை ஒன்றிணைப்பதற்காகவே நடைப்பயணம் செய்கிறார். அவர் 3,500 கிமீ நடந்து வருகிறார். குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ளோம். 

கடந்த முறை தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அவர்களை சந்திக்க முடியவில்லை. ஹிமாசல் முதல்வராக பதவியேற்ற பிறகு அவர்கள் இருவரையும் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும் என்றார். முன்னதாக மத்திய பிரதேச மாநிலம் சிங்ரெளலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடெங்கும் வெறுப்புணா்வு நிலவுவதாக இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தி கூறி வருகிறாா். 

வெறுப்புணா்வை தூண்டுவது யாா் என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன். பிரதமா் வெறுப்புணா்வை தூண்டுகிறாரா? வெறுப்புணா்வு இருப்பதை ராகுல் காந்தி எங்கு பாா்த்தாா்?. மக்களிடம் சென்று பிரதமருக்கும் பாஜகவுக்கும் எதிராக ராகுல் காந்தி வெறுப்புணா்வை தூண்டுகிறாா். இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

SCROLL FOR NEXT