தில்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தலைநகர் தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
தலைநகர் தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
தில்லியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் நேபாளத்தை மையமாக் கொண்டு ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30 வினாடிகள் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் பாதிப்பு உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக தில்லியின் பல்வேறு இடங்களில் கட்டங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.