இந்தியா

போர் விமான விபத்து சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது: மல்லிகார்ஜுன கார்கே

இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் வானில் மோதிக் கொண்ட சம்பவத்தில் விமானி ஒருவர் பலியான சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் வானில் மோதிக் கொண்ட சம்பவத்தில் விமானி ஒருவர் பலியான சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 விமானிகளும் விரைவில் நலம்பெற வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா என்ற இடத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் - சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 - நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒரு விமானி பலியானார்.

 இன்று காலை இரு விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டபோது, விமானம் விபத்துக்குள்ளானதாகவும், ஒரு விமானத்திலிருந்து இரண்டு விமானிகள் வெளியே குதித்து உயிர்பிழைத்ததாகவும் மற்றொரு விமானியின் உடல் பாகங்கள் சம்பவ இடத்தில் இருந்து கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுகோய் விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய விமானிகள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் வானில் மோதிக் கொண்ட சம்பவத்தில் விமானி ஒருவர் பலியான சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் வானில் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான துரதிருஷ்டமான செய்தி மனதிற்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

உயிர்த்தியாகம் செய்த விமானிக்கு எனது வணக்கங்கள். நாங்களும், எங்களது பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்துக்காக இருக்கிறோம். இந்த விபத்தில் காயமடைந்துள்ள 2 விமானிகள் விரைவில் நலம் பெற நாம் பிரார்த்தனை செய்து கொள்வோம் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு: தமிழக அரசுக்கு கேள்விகள்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டா்: சொந்த செலவில் வழங்கினாா் அமைச்சா் காந்தி

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி, பிரிட்டன் பயணம் ரூ.15,516 கோடி அந்நிய முதலீடுகளை ஈர்த்திருப்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

இறைச்சித்தம் வழங்கிய தலைமைக் கொடை!

SCROLL FOR NEXT