இந்தியா

பிரதமரே மிகப் பெரிய எதிர்க்கட்சியின் தலைவர்: திரிணமூல் காங்கிரஸ்

DIN

பிரதமர் நரேந்திர மோடிதான் மிகப் பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் என திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பிரதமரின் மிகப் பெரிய எதிர்க்கட்சி வேலைவாய்ப்பளிக்க, ஜனநாயகத்தை வளர்க்க, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க மற்றும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றுக்கு எதிராக உள்ளது. எதிர்க்கட்சிகள் குறித்து பிரதமர் அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தாக்கிப் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திரிணமூல் மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இவை எதிர்க்கட்சிகள் அல்ல பிரதமர் அவர்களே. நீங்கள் தான் மிகப் பெரிய எதிர்க்கட்சியின் தலைவர். உங்களது அந்த மிகப் பெரிய எதிர்க்கட்சி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிப்பதற்கு எதிராக உள்ளது. ஜனநாயகம் செழித்து வளர்வதற்கு, கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படுவதற்கு மற்றும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு எதிராக உள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பிரதமர், ஒன்றாக ஒருங்கிணைய நினைக்கும் எதிர்க்கட்சிகளின் சமூக ஊடகப் பதிவுகள் இந்த நாள்களில் அதிக அளவில் வைரலாகி வருகிறது எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT