இந்தியா

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வேலைகள் நடைபெறுகிறது: பாஜக

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதன் வெளிப்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பதை மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.

DIN

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதன் வெளிப்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பதை மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: பொது சிவில் சட்டம் என்பது ஆளும் பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. அதன் வெளிப்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். 

அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முடிவுக்கு பழங்குடி மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ப்ட  பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பலவும் இந்த பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

கபில்தேவ் வரிசையில் இடம் பிடித்த ஏழைத் தச்சரின் மகள் அமன்ஜோத் கெளர்!

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

SCROLL FOR NEXT