இந்தியா

மேற்கு வங்க கலவரம்! மத்திய பாதுகாப்புப் படை என்ன செய்கிறது?

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி வன்முறை நடைபெற்ற நிலையில், மத்திய அரசு அனுப்பிய பாதுகப்புப் படை என்ன செய்கிறது என அமைச்சர் ஷாஷி பஞ்சா கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN


மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி வன்முறை நடைபெற்ற நிலையில், மத்திய அரசு அனுப்பிய பாதுகப்புப் படை என்ன செய்கிறது என அமைச்சர் ஷாஷி பஞ்சா கேள்வி எழுப்பியுள்ளார். 

மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இன்று (ஜூலை 8) தொடங்கியது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே மேற்கு வங்கத்தில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா் இடையே மோதலும் வன்முறையும் நடைபெற்று வந்தன.  

இந்த மோதலில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 12-க்கும் மேற்பட்டவா்கள் கொல்லப்பட்டனா். காங்கிரஸ் தொண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஷாஷி பஞ்சா, மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருதற்கு முந்தைய இரவில் கடும் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களைக் காப்பதில் மத்திய பாதுகாப்புப் படை தோல்வி அடைந்துள்ளது. 65,000 மத்திய காவல் படை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஏன் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தத் தவறினர்?

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குடிமக்களின் உரிமைகளை காக்க மத்திய அரசு பாதுகாப்புப்படை தோல்வியடைந்துள்ளது என விமர்சித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT