FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர்!

பஞ்சாபில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 

Updated On : 8 ஜூன் 2023, 12:44 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

பஞ்சாபில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். 

பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்(ட்ரோன்) மூலம் இந்திய எல்லைக்குள் கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ போதைப்பொருள்களை பி.எஸ்.எப் மற்றும் பஞ்சாப் காவல்துறையினர் சுட்டுவீழ்த்தி அதிலுள்ள போதைப் பொருள்களை மீட்கப்பட்டதாகத் துணை ராணுவப் படை தெரிவித்துள்ளது.

புதன்கிழமை இரவு 9 மணியளவில் பி.எஸ்.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், டார்ன் டரன் மாவட்டத்தில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் வந்ததையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டறிந்தனர். 

பின்னர், ஆளில்லா ட்ரோனில் இருந்து 2.5 கிலோ போதைப்பொருள்களை பிஎஸ்எப் மற்றும் பஞ்சாப் காவல்துறையினர் மீட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments