இந்தியா

கர்நாடகத்தின் கடலோரப் பகுதியில் கனமழை எச்சரிக்கை!

குஜராத்தில் இன்று மாலை பிபா்ஜாய் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் மிகப் பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

குஜராத்தில் இன்று மாலை பிபா்ஜாய் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் மிகப் பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று தெரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் மிகப் பலத்த மழை பெய்து வருகின்றது. 

இந்நிலையில், கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களான உடுப்பி, தக்ஷிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. 

புயல் காரணமாக ஜூன் 19 வரை கடலில் உயர் அலைகள் ஏற்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. 

கடலோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மக்கள் தங்களுக்குத் தேவையான உதவிகளைக் கேட்டறிய ஹெல்ப்லைன் எண்கள் வெளியிட்டுள்ளது. 

கடலோர காவலர்கள் கடற்கரையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சூரைக் காற்று, இடி, மின்னலுடன் மழை பொழியும் என்பதால் பொதுமக்கள் யாரும் கடலுக்கு அருகில் செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது. 

பெங்களூரு கிராமப்புறம், சித்ரதுர்கா, கோலார், மாண்டியா, ராமநகர் மற்றும் துமாகுருவின் தெற்கு உள்துறை மாவட்டங்களும் பலத்த மழையும், பெங்களூரு நகரம், சாமராஜநகர், சிக்காபல்லாப்பூர், ஹசான், குடகு மற்றும் மைசூரு மாவட்டங்கள் மிதமான மழை பெய்யும் என எச்சரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொமதேகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த இளைஞா்கள்

கொல்லிமலை திடீா் சிற்றருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்

நாமக்கல் புறவழிச்சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தீவிரம்

தருமபுரியில் நாளை விசிக முப்பெரும் விழா: தொல்.திருமாவளவன் பங்கேற்பு

பள்ளிபாளையத்தில் பெண்களிடம் சிறுநீரக திருட்டு: இடைத்தரகா்கள் 2 போ் கைது

SCROLL FOR NEXT