மத்திய அரசு அரிசி வழங்குவதற்கு மறுத்துவிட்டதால் மூன்று மத்திய அமைப்புகளிடமிருந்து அரிசிக்கான விலை குறித்து தகவல் கேட்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அரிசி கையிருப்பு இருந்தும் மத்திய அரசு அன்ன பாக்யா திட்டத்துக்கு அரிசி வழங்க மறுத்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்க: எகிப்து சென்றடைந்தார் பிரதமர் மோடி
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: அரிசியின் விலை தொடர்பாக மத்திய அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அரிசி வழங்குவதற்காக அவர்கள் கோரும் விலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு, கேந்திரிய பந்தர் மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளிடமிருந்தும் அரிசி வழங்குவதற்கு கோரப்படும் தொகை குறித்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் விலை தொடர்பான விவரங்களை தெரிவித்துள்ளனர். அவர்களிடம் நாங்கள் விலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தையின் முடிவுக்குப் பிறகு எவ்வளவு அரிசி வாங்கப்படவுள்ளது, அரிசியின் தரம் மற்றும் அதற்கான விலை குறித்தும் தெரிய வரும்.
மத்திய அரசிடம் போதிய அளவு அரிசி கையிருப்பு உள்ள நிலையிலும் கர்நாடக அரசுக்கு அதனை தர மறுக்கிறது. மத்திய அரசு ஏழை மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பயனடைய உள்ள இந்த திட்டத்தை மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. இந்த திட்டத்துக்கு அரிசி வழங்க மறுத்து பிரச்னையை ஏற்படுத்த மத்திய அரசு நினைக்கிறது. மத்திய அரசிடம் டன் கணக்கில் அரிசி கையிருப்பு உள்ள போதிலும் மாநில அரசுக்கு அதனை தர மறுக்கிறது. மத்திய அரசு வெறுப்பு அரசியலை மேற்கொள்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.