முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனா சிகிச்சையில் 1,549 பேர்!

நாடு முழுவதும்  கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,549 ஆகக் குறைந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:14 PM
பகிர்:

நாடு முழுவதும்  கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,549 ஆகக் குறைந்துள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.  

அதன்படி, இன்று புதிதாக 47 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 4,49,94,144 உள்ளது. 

இன்று காலை 8மணி அறிக்கையின்படி கரோனா பாதித்து  இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 5,31,905 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 98.81 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் இதுவரை 1.18 சதவீதம் பேர் கரோனா பாதித்து இறந்துள்ளனர். 4,44,60,690 பேர் கரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →