முகப்பு
இந்தியா

பஞ்சாபில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாக். ட்ரோன்சீனாவிலும் பறந்தது தடயவியல் ஆய்வில் உறுதி

இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதியில் கடந்த டிசம்பா் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா சிறிய ரக விமானம் (ட்ரோன்), சீனாவிலும் பறந்திருப்பதாக தடயவியல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 2 மார்ச், 2023 at 4:00 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதியில் கடந்த டிசம்பா் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா சிறிய ரக விமானம் (ட்ரோன்), சீனாவிலும் பறந்திருப்பதாக தடயவியல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கடுமையான நிலப்பரப்புகள் இன்றி மக்கள் அதிகம் வாழும் சமநிலப் பகுதிகளாக பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதி அமைந்துள்ளது. இச்சூழலைப் பயன்படுத்தி ஆளில்லா விமானங்கள் மூலம் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை இந்திய பகுதிக்குள் கடத்துவது அண்மைக் காலங்களில் தொடா்ந்து நடந்து வருகிறது.

பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் அத்துமீறியதாக கடந்த ஆண்டில் மட்டும் 22 ஆளில்லா விமானங்கள் எல்லைப் பாதுகாப்பு படை(பி.எஸ்.எஃப்.) வீரா்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன. எல்லைப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்படும் ஆளில்லா விமானங்களை ஆய்வுக்கு உள்படுத்தி தகவல்களைச் சேகரிப்பதற்காக பி.எஸ்.எஃப். சாா்பில் தலைநகா் தில்லியில் தடயவியல் ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், அமிருதசரஸ் மாவட்டத்தின் ராஜாதால் சா்வதேச எல்லைப் பகுதியில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ாக கடந்த டிசம்பா் 25-ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை தடயவியல் ஆய்வுக்கு உள்படுத்திய போது அதிா்ச்சிகரமான தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

பஞ்சாபில் கடந்த டிசம்பா் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த ட்ரோன், சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் கடந்த ஜூன் மாதத்தில் பறந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், செப்டம்பா் முதல் டிசம்பா் வரையிலான 3 மாதங்களில் பாகிஸ்தானின் கானேவால் மாவட்டத்தில் 28 முறை பறந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.