கோப்புப்படம் 
இந்தியா

ராணுவ பயிற்சி: இலக்குத் தவறி குண்டு வெடித்து 3 பேர் பலி

பிகார் மாநிலம் கயாவில் ராணுவ பயிற்சியின் போது இலக்குத் தவறி வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர்.

DIN

பிகார் மாநிலம் கயாவில் ராணுவ பயிற்சியின் போது இலக்குத் தவறி வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர்.

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில் புதன்கிழமை  ராணுவ பயிற்சியின் போது இலக்குத் தவறி வெடிகுண்டு வெடித்ததில்  3 பேர் பலியாகினர் மற்றும் ஆறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தை உறுதி செய்த பாரசட்டி காவல் நிலைய அதிகாரி, மாவட்டத்தில் உள்ள பாரசட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட குபேர் பிண்ட் கிராமத்தில் ராணுவ பயிற்சியின் போது காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் கயாவில் உள்ள மகத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கயா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவ பயிற்சியின் போது இலக்குத் தவறி, தவறுதலால பொதுமக்கள் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது என தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT