மணிப்பூரில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு
மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுட மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுட மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மணிப்பூரில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பழங்குடி மாணவர் அமைப்பு சார்பில் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நேற்று நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினரல்லாதோரும் பேரணியில் ஈடுபட்டதால், இருதரப்பிடையே மோதல் ஏற்பட்டது.
Advertisement
இதன் விளைவாக மலைகளையொட்டியிருந்த வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடைகள் எரிந்து சேதமடைந்தன.
இரு இன குழுக்களிடையே மோதல் காரணமாக கலவரம் நீடித்து வருகிறது. கலவரத்தை அடக்க மணிப்பூரில் 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலவரக்காரர்களை கண்டதும் சுட அம்மாநில ஆளுநர் அனைத்து மாவட்ட ஆட்சியகங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த உத்தரவு பிறப்பிப்பதாக ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.