முகப்பு
இந்தியா

கர்நாடகம்: மாலை 5 மணி நிலவரப்படி 65.69 சதவீத வாக்குகள் பதிவு!

கர்நாடக பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 65.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:57 PM
பகிர்:

கர்நாடக பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 65.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

224 உறுப்பினா்களைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  கர்நாடக பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 65.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 13 ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. 

தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 263 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 1,65,389 போலீஸாா் பாதுகாப்புப் பணியிலும் 3.5 லட்சம் அரசு ஊழியா்கள் தோ்தல் பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் களத்தில் உள்ளன. மொத்தம் 2,615 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். இதில் ஆண் வேட்பாளா்கள் 2430, பெண் வேட்பாளா்கள் 184 போ் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →