முகப்பு
இந்தியா

குஜராத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

ஒரு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை காலை குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

ஒரு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை காலை குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

அகில இந்திய முதன்மை ஆசிரியர் கூட்டமைப்பின் 29வது பென்னியல் மாநாடான அகில பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷனில் பிரதமர் பங்கேற்கிறார்.

அதன்பிறகு மகாத்மா மந்திரில் நடைபெறும் மற்றொரு நிகழ்ச்சியில் சுமார் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். 

மேலும், குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக் சிட்டிக்கு சென்று பல்வேறு பணிகளின் நிலையை ஆய்வு செய்வார். காந்திநகரில் நடைபெறும் மற்றொரு நிகழ்ச்சியில் ரூ.2,450 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் 
நாட்டுகிறார்.

பின்னர், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா கிராமப்புற மற்றும் நகர்ப்புற திட்டங்களின் அடிக்கல்லையும் பிரதமர் தொடங்கி வைப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →